467. எங்கே செல்லும் இந்தப் பாதை ?
சட்டக் கல்லூரி மாணவர்கள் பயங்கர வன்முறை
சென்னை சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் உருட்டுக்கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர். போலீசார் முன்னிலையில் நடந்த இந்த கொலை வெறித் தாக்குதலில், மூன்று மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், "செமஸ்டர்' தேர்வு நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் சிலர் உருட்டுக்கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் உலவிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்ததும், நூற்றுக்கணக்கான போலீசார் கல்லூரி முன் குவிக்கப்பட்டனர். மாணவர்களுக்குள் இத்தகவல் பரவியதும், யாரும் வெளியில் வரவில்லை. மாலை 5 மணியளவில் மாணவர்களில் ஒரு பிரிவினர் கையில் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டையுடன் கல்லூரியில் உலா வந்தனர். அவர்களைப் பார்த்ததும் மற்றொரு பிரிவினர், ஆயுதங்களால் பதில் தாக்குதல் நடத்தினர். இரு குழுவினரும் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். மாலை 5 மணியளவில் துவங்கிய இந்த கொலைவெறி தாக்குதல், இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த தாக்குதலில் நான்காம் ஆண்டு மாணவர் பாரதிகண்ணன் (22) மூன்றாம் ஆண்டு மாணவர் ஆறுமுகம் (19) இரண்டாம் ஆண்டு மாணவர் அய்யாதுரை (20) நான்காம் ஆண்டு மாணவர் சித்திரைச்செல்வன் (22) ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனர். மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையிலும், சித்திரைச்செல்வன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காரணம் என்ன?: கல்லூரி மாணவர்கள், ஜாதி அடிப்படையில் இரு பிரிவாக பிரிந்து செயல்படுவதால், இந்தத் தாக்குதல் நடந்ததாக சில மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு வாரமாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். தகவல் அறிந்ததும், போலீசார் உஷாராகி கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி முதல்வர் உறுதி: சட்டக் கல்லூரி வளாகத்தில், ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ், நிருபர்களிடம் கூறும்போது, ""இரண்டு பிரிவு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் ஆயுதங்கள் கொண்டு வர அனுமதியில்லை. அனுமதியை மீறி கொண்டு வந்துள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்படும். தவறு செய்த மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கொதித்தெழுந்த பொதுஜனம்: சென்னை சட்டக் கல்லூரியில் இரண்டு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் உருட்டுக் கட்டை, கத்தி, டியூப் லைட், கற்கள், அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். தனியாக சிக்கிய மாணவர்களை, ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இக்காட்சியை குறளகம் சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் பார்த்தனர். மாணவர்களின் கொலைவெறித் தாக்குதல், போலீசார் முன்னிலையில் நடந்ததைக் கண்டதும், கடும் அதிருப்தியடைந்தனர். போலீஸ் அதிகாரிகளிடம் சென்று, "உங்கள் கண்ணெதிரிலேயே காட்டுத்தனமான தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது; இதை பார்த்தும், பார்க்காதது போல் இருக்கிறீர்களே? நீங்கள் எல்லாம் சட்டம், ஒழுங்கை எப்படி காப்பாற்றப் போகிறீர்கள்? நாங்கள் சாட்சிக்கு வருகிறோம். அவர்களை கட்டுப்படுத்துங்கள்' என ஆவேசமாக தெரிவித்தனர். மேலும், மாணவர்களைப் பார்த்தும் அங்கிருந்த மக்கள் சத்தம் போட்டனர். மாணவர்களும் திருப்பி சத்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீது வழக்கு: சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட எட்டு மாணவர்கள் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து, நேற்று பயங்கரமாக மோதிக்கொண்டனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு பேர், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ், எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, இருதரப்பைச் சேர்ந்த மணிமாறன், ரவீந்திரன், சித்திரைச்செல்வன், குபேந்திரன், திலீப், வெற்றிச்செல்வன், ரவிவர்மன், பிரேம்குமார் ஆகியோர் மீது, கொலை முயற்சி, மிரட்டல், கலவரம் தூண்டுதல், ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர். இரண்டாம் ஆண்டு மாணவர் திலீப்(22) கைது செய்யப்பட்டுள்ளார்.
சாலை மறியல்: தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 50க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை சமாதானம் செய்து, கலைந்து போகச் செய்தனர். அதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நன்றி: தினமலர்
Pl. read: சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?! --- Kuzhali
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood sport --- Idlyvadai
9 மறுமொழிகள்:
Test :(
சன் டீவியில் இந்த காட்சிகளைப் பார்த்தேன்.
எ கொ இ ச - உண்மையிலேயே!
12.12 அன்று நடந்த வன்முறை சகிக்க முடியாத கொடுமை..
அமெரிக்க நாட்டில் ஒரு கருப்பரை போலீசார் இப்படி அடித்த
காட்சியை நினைவுப் படுத்தியது.. அப்படி என்னதான் அவர்களுக்குள்
துவேசம் என்பது புரியவில்லை.. அந்தப் பையன் என்ன சிங்களவனா..
அல்லது ஏதாவது புலி சிங்கமா. காந்தி இந்த நாட்டிலா பிறந்தார்..
சந்தேகமாக இருக்கிறது..
நாம் இந்த செந்தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை நமீபியா அல்லது எத்தியோப்பியா போல் ஏதாவது நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. ஆமாம் இங்கு அரசாங்கம், போலீஸ் இவையெல்லாம் இருக்கின்றனவா. இந்த நிலையில் நாம் சிங்கள காடயரை காய்ந்து கொண்டு இருக்கிறோம்.
தமிழ் நாட்டில் ஸ்ரீலங்கா பிரச்சனை தான் இப்போது முக்கியம். இது
பற்றி ஒன்றும் கவலை பட தேவை இல்லை. ( காய்கறி மின்வெட்டு
எல்லாம் மறந்து விட்ட மாதிரி இதையும் மறப்போம்)
இப்படிக்கு
ஆர்வீயார்
தமிழ் நாட்டில் ஸ்ரீலங்கா பிரச்சனை தான் இப்போது முக்கியம். இது
பற்றி ஒன்றும் கவலை பட தேவை இல்லை. ( காய்கறி விலை மின்வெட்டு எல்லாம் மறந்து விட்ட மாதிரி இதையும் மறப்போம்)
இப்படிக்கு
ஆர்வீயார்
அன்புள்ள பாலாஜி
http://balaji_ammu.blogspot.com/2006/10/4.html
இரண்டு வருடத்துக்கு முன் இதே கல்லூரியில் நடந்த கலவரம் பற்றி நகைச்சுவையாக பதிவிட்டிருந்தோம். வழமையாக இது நடந்து வருவதும் உண்மை.ஆனால் நேற்று நடந்த சம்பவம் அருவருப்பின் உச்ச கட்டம். அன்கான்ஷியசாகிப் போன ஒருவனை திரும்பத் திரும்ப வந்து தாக்கி விட்டுப் போகும் என்ன மாதிரியான மிருகங்கள் இவர்கள் ?
கி அ அ அனானி
என்ன கொடுமையப்பா இதெல்லாம்.
நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...
தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....
யாரவது எதாவது சாதித்தால்.. தமிழுக்கே.. தமிழருக்கே பெருமை என்று சொல்லி கொள்கின்றோமே...
இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது...
மேம்போக்காக பார்த்தால், எதோ மாணவர்கள் வெறிபிடித்து சண்டை போட்டதாக தோன்றுகின்றது..
இதற்கு யார் காரணம்...?
ஜாதி யா?
தமிழ் நாட்டில் யாரும் ஜாதி பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..
பெயரில் இல்லை ... ஆனால்..
ஜாதி தமிழனின் குருதியில் கலந்து விட்டது..
வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்..
வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி வெறி அதிகம்...
என்ன செய்வது...
௧.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..
௨.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..
௩. ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ...
௪ . வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்...
௫ . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, "ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் " ... "அடங்க மறு " என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..
௬ . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் ...
--
இதெல்ல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும்...
ஆனால்...கண்டிப்பாக இவை எதுவும் நடக்க போவதில்லை ....
மூன்று வருடங்களுக்கு முன், ஒரு சமூகத்தின் தலைவரின் ஜெயந்தி விழாவை ஒட்டி, என் கல்லூரி மாணவர்கள் திடீர் என்று இரண்டு பட்டதை என் கண்களால் பார்த்தேன்..
பொறியியியல் படிக்கும் வசதி படைத்த நகரத்து மாணவர்களே உருட்டு கட்டைகளுடன் திரிந்தனர்..
அன்று நடந்தது பெரிதாக வில்லை / பெரிதாக வெளியில் தெரியவில்லை...
இன்று ஊடகங்களின் கண் முன் நடந்து விட்டது..
நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...
தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....
Post a Comment